Posts

Showing posts from September, 2017

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்

Image
இந்திய நாட்டை மாற்றிய சம்பவங்கள் 59 மற்றும் தமிழ்நாட்டை மாற்றிய சம்பவங்கள் 12 என்று இந்தியா டுடே சில வருடங்களுக்கு முன் வெளியிட்டது...! தமிழ்நாட்டை மாற்றிய சம்பவங்களில் வன்னியர் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டது 1987 ஆம் ஆண்டு - வன்னியர் உட்பட அனைத்து சாதியினருக்கும் சாதிவாரி மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு கேட்டு செபடம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள் முதல், ஒருவார கால சாலமறியலை அறிவித்தது, மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கம ். இந்த சமூகநீதிப் போரில் 21 பேர் உயிரிழந்தனர், ஒரு லட்சம் பேர் சிறைக்கு சென்றனர், பல்லாயிரக் கணக்கானோரின் வீடுகளும், உடைமைகளும் காவல்துறை வெறியாட்டத்தில் பாழாக்கப்பட்டன..! சமூகநீதிக்கான போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் அதிகம் படிப்பறிவில்லாத ஏழைகள். அவர்களது குடும்பத்தினரும் கூட குறிப்பிடத்தக்க அளவுக்கு கல்வித்தகுதி பெற்றவர்கள் இல்லை. 20 சதவீத இட ஒதுக்கீட்டால் உயர்க்கல்வியையோ, அரசு வேலை வாய்ப்பையோ பெரும் அளவுக்கு இவர்களது குடும்பங்களில் தகுதிபெற்றவர்கள் பெரிதாக இருக்கவில்லை. ஆனாலும், தம